News November 23, 2024
மகாராஷ்டிராவில் அமைச்சராக போகும் தமிழர்?

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைக்கப் போவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில், சயானி கோலிவாடா தொகுதியைக் கைப்பற்ற போகும் பாஜகவின் கேட்பன் தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கக்கூடும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் தேவேந்திர ஃபட்னாவீஸுக்கு மிக நெருக்கமானவர். தற்போது ஃபட்னாவீஸ்தான் அடுத்த முதல்வர் என்ற பேச்சு உள்ளதால், தமிழ்ச்செல்வன் அமைச்சராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 22, 2026
திருப்பரங்குன்றத்தில் பாஜக போட்டியா?

2026 சட்டமன்ற தேர்தலில் மூத்த பாஜக தலைவர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த தகவல் கசிந்துள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசையும், திருப்பரங்குன்றம் தொகுதியில் ராம சீனிவாசனும் போட்டியிடுவதற்கு பாஜக தலைமையுடன் ஆலோசித்துள்ளனராம். ஆனால் திருப்பரங்குன்றம் MLA-ஆக ராஜன் செல்லப்பா உள்ளதால், அத்தொகுதியை பாஜகவுக்கு அதிமுக விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News January 22, 2026
பண மழை கொட்டும் 5 ராசிகள்

தை மாதம் 8-ம் நாள் சதுர்த்தி விரத தினமான இன்று, குருவின் பார்வையை பெறுகிறார் சந்திரன். கூடுதலாக சூரியன், புதன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களும் ஒரே ராசியில் இணைய வலிமையான சதுர்கிரஹி யோகம் உண்டாகிறது. இன்று உண்டாகும் இந்த சுப யோகங்களின் சேர்க்கை ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம் ராசியினருக்கு லட்சுமி தேவியின் ஆசியையும், எதிர்பார்த்த பண வரையும் கொண்டு வரும் என்பது ஐதீகம்.
News January 22, 2026
அன்புமணிக்கு ‘மாம்பழம்’.. பேனரில் உறுதியான சின்னம்

மதுராந்தகத்தில் நாளை நடைபெறவுள்ள NDA கூட்டணி பரப்புரை பொதுக்கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனரில் ‘மாம்பழம்’ சின்னம் இடம்பெற்றது கவனத்தை ஈர்த்துள்ளது. அன்புமணிக்கு மாம்பழச் சின்னம் கிடைக்காது என ராமதாஸ் தரப்பு கூறிவரும் நிலையில், பேனரில் மாம்பழச் சின்னம் இடம்பெற்றுள்ளது. அதேபோல், அந்த பேனரில் பிரேமலதா, கிருஷ்ணசாமி புகைப்படங்கள் இடம்பெறாததால், அவர்கள் NDA -வில் இணைவில்லை என்பது உறுதியாகியுள்ளது.


