News November 23, 2024

விவசாய நிலத்தில் முதலை: உயிருடன் மீட்ட வனத்துறை

image

காட்டாங்கொளத்துார், கீரப்பாக்கம் அருகே உள்ள பெரிய அருங்கால் கிராமத்தின் அருகில் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில், 7 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று ஏரியில் இருந்து ஊர்ந்து ஊரப்பாக்கம் – நல்லம்பாக்கம் சாலையை கடந்து அருகில் உள்ள விவசாய நிலத்திற்குள் சென்றுள்ளது. தகவலறிந்து வந்த தாம்பரம் வனத்துறை அதிகாரிகள், முதலையை உயிருடன் பிடித்து வண்டலூரில் ஒப்படைத்தனர்.

Similar News

News August 5, 2025

செங்கல்பட்டு ரேஷன் அட்டைதாரர்களே…

image

செங்கல்பட்டில் புதிய ரேஷன் அட்டை (மின்னணு கார்டு) வாங்க இனி அலைச்சல் தேவையில்லை. புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கவும், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. <>இந்த லிங்கில்<<>> சென்று நீங்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதன் மூலம் பெயர் சேர்க்கை, நீக்கம் & உங்கள் முகவரியை மாற்றம் செய்யலாம். ஷேர் பண்ணுங்க! <<17309403>>தொடர்ச்சி<<>>

News August 5, 2025

செங்கல்பட்டு ரேஷன் அட்டைதாரர்களே…

image

புதிய ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்றாலோ (அ) உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தாலோ நீங்கள் இந்த தளத்திலே புகார் அளிக்கலாம். முதலில் உங்கள் பெயரை குறிப்பிட வேண்டும். உங்கள் தொலைபேசி எண் & இ-மெயில் முகவரியை உள்ளிட வேண்டும். வகைப்பாடு என்னும் இடத்தில மின்னணு அட்டை கிடைக்க பெறவில்லை என்பதை தேர்வு செய்து உங்கள் புகாரை அனுப்பவும். இதை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News August 5, 2025

செங்கல்பட்டில் ரயில்வே வேலை!

image

செங்கல்பட்டு மக்களே, இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர்- 5623, டிக்கெட் சூப்பர்வைசர்- 6235, ரயில் மேனேஜர்- 7367, அக்கவுண்ட் அசிஸ்டெண்ட்- 7520, கிளர்க்- 7367 என மொத்தம் 30,307 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி படித்திருந்தாலே போதும். ரூ.29,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு மேல்தான் <>இந்த இணையத்தளத்தில் <<>>விண்ணப்பிக்க முடியும். சேவ் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!