News November 23, 2024

வொர்லி தொகுதியில் ஆதித்யா தாக்கரே முன்னிலை

image

மகாராஷ்டிராவின் வொர்லி (Worli) தொகுதியில் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே முன்னிலை வகிக்கிறார். இந்தத் தொகுதியில் அவரை எதிர்த்து களம் கண்ட சிவசேனா (ஷிண்டே) வேட்பாளர் மிலிண்ட் முரளி தியோரா பின்தங்கியுள்ளார். இவர் அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.

Similar News

News October 15, 2025

National Roundup: மங்கோலிய அதிபருடன் பேச்சுவார்த்தை

image

*இந்தியா வந்துள்ள மங்கோலிய அதிபரை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். *சாதிய பாகுபாட்டில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய ம.பி. ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. *ராஜஸ்தானில் அரசு பஸ்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 20 பேருக்கு, PM மோடி தலா ₹2 நிவாரணம். *பிஹாரில் 48 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

News October 15, 2025

அக்டோபர் 15: வரலாற்றில் இன்று

image

*உலக கைகழுவும் நாள். *1764 – மருதநாயகம், ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட நாள். *1878 – மின்விளக்கு தயாரிக்கும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தை எடிசன் ஆரம்பித்தார். *1931 – முன்னாள் குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல்கலாம் பிறந்தநாள். *1932 – டாட்டா ஏர்லைன்ஸ் தனது முதலாவது விமான சேவையை தொடங்கியது. இது பின்னர் ஏர் இந்தியா எனப் பெயர் மாற்றம் பெற்றது.

News October 15, 2025

பைக்கர்களை கார் ஓனர்களாக மாற்றிய GST 2.0

image

GST 2.0 பைக்கர்கள் பலரை கார் வாங்க வைத்துள்ளதாக மாருதி சுசூகி SEO பார்த்தோ பானர்ஜி தெரிவித்துள்ளார். சிறிய கார்கள் விற்பனை 16.6%ஆக இருந்த நிலையில், GST 2.0 அமலான பிறகு, அது 22% ஆக உயர்ந்ததாகவும், ஷோரூம்களில் ஹெல்மெட் அணிந்த பலரை பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த செப்.3 முதல் 22-ம் தேதி வரை நாளொன்றுக்கு 1 லட்சம் புக்கிங் நடந்ததாகவும், அதில் 80,000 சிறிய கார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!