News November 23, 2024
மதுரையில் இன்னும் சற்று நேரத்தில்

மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்
Similar News
News December 28, 2025
மதுரையில் ஒரே நாளில் 17,042 மனு

மதுரை மாவட்டம்10 சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா்கள் பட்டியல் திருத்தப் பணி சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன. இந்த முகாம்களில் 17,042 வாக்காளா்கள் மனுக்கள் அளித்தனா். இவற்றில், புதிய வாக்காளா்கள் சோ்க்கைக்கு 14,036 மனுக்களும், பெயா் நீக்கத்துக்கு 219 மனுக்களும், முகவரி மாற்றம், பட்டியலில் திருத்தம், புகைப்பட அடையாள அட்டைக்காக 2,787 மனு பெறப்பட்டது.
News December 28, 2025
மதுரையில் இனி Whatsapp மூலம் தீர்வு

மதுரை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!
News December 28, 2025
மதுரை: பத்திர எழுத்தாளரை கத்தியால் குத்திய சிறுவன்

மதுரை ஜெய்ஹிந்த்புரம் முருகன்(53) பத்திர எழுத்தராக உள்ளார். அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் வீட்டிற்கு அடங்காமல் சுற்ற, அவரது தாய்க்கும் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பத்திரத்தில் எழுதி வாங்கினர். முருகன் பத்திரத்தை எழுதி கொடுத்ததால் ஆத்திரமடைந்த சிறுவன் மற்றொரு சிறுவனுடன் வந்து அவரை கத்தியால் குத்தியுள்ளார். திடீர்நகர் போலீசார் இருவரையும் இன்று கைது செய்தனர்.


