News November 23, 2024
சுட சுட வந்த Good Bad Ugly அப்டேட்

அஜித் படம் வருமா என காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூசாக Good Bad Ugly பொங்கல் தினத்தில் வெளியாகும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் அஜித் நாளை தனது காட்சிகளை நிறைவு செய்கிறாராம். நவ. 27ஆம் தேதி முதல் அஜித்தின் கார் ரேஸிங் கம்பெனி தீவிரமாக பயிற்சி மேற்கொள்ளவுள்ள நிலையில், அஜித்தும் இதில் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது. என்னவோ, தல படம் வந்த போதும்..
Similar News
News October 27, 2025
DMK Vs BJP.. மாறிமாறி விமர்சனம்

அதிமுகவின் உரிமைகளை பாஜகவிடம் EPS அடகு வைத்துவிட்டதால், மக்களின் உரிமைகளை காக்க வேண்டியவர்கள் திமுகவினரும் தோழமைக் கட்சியினரும்தான் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி, மாநிலத்தின் உரிமைகளை, வளங்களை லஞ்சம் மற்றும் ஊழலிடம் திமுக விற்று விட்டதால், ஒட்டு மொத்த மாநிலத்தின் நலன்களை பேணி காக்க வேண்டியவர்கள் பாஜக, தோழமை கட்சியினர் தான் என பதிலடி கொடுத்துள்ளார்.
News October 27, 2025
கர்நாடகாவில் இனி 30 மார்க் எடுத்தால் பாஸ்

கர்நாடகாவில் SSLC, PUC-க்கான தேர்ச்சி சதவீதத்தை 35%-லிருந்து 33% ஆக குறைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, SSLC-ல் 206/625 மதிப்பெண்களும், PUC-ல் 198/600 மதிப்பெண்களும் (ஒரு பாடத்தில் 30 மார்க் எடுக்க வேண்டும்) எடுத்தால் பாஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழகத்தில் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்கலாமா? அவ்வாறு குறைத்தால் எவ்வளவு குறைக்கலாம் என்று கமெண்ட் பண்ணுங்க.
News October 27, 2025
கவிஞர் சினேகனின் தந்தை காலமானார்

பிரபல கவிஞரும், நடிகருமான சினேகனின் தந்தை சிவசங்கு(102) காலமானார். தஞ்சாவூர் மாவட்டம் புது காரியாபட்டியில் உள்ள வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் தனது இரட்டை குழந்தைகளை தந்தையிடம் கொடுத்து வாழ்த்து பெற்ற நெகிழ்ச்சி வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். சினேகனுக்கு திரைத்துறையினர் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். #RIP


