News November 23, 2024
இந்தியாவே உற்றுப் பார்க்கும் பிரியங்கா காந்தி!

வயநாடு எம்.பி. இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி மகுடம் சூடுவாரா என்பது சிறிது நேரத்தில் தெரிந்துவிடும். வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ரிசைன் செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை பிரியங்கா களமிறங்கினார். அவருக்கு போட்டியாக கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோகேரியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர். முதன்முறையாக தேர்தல் களத்தில் நிற்கும் பிரியங்காவை இந்தியாவே உற்று நோக்கி வருகிறது.
Similar News
News November 3, 2025
₹51 கோடி வழங்கும் BCCI!

உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, BCCI ₹51 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது. இத்துடன் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, ICC ₹39.78 கோடி பரிசுத் தொகை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. ICC வழங்கிய கடந்த உலகக் கோப்பை பரிசுத் தொகையை காட்டிலும் இது 239% அதிகமாகும்.
News November 3, 2025
FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்!

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-வது நாளாக சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. இன்று(நவ.3) சென்செக்ஸ் 242 புள்ளிகள் சரிந்து 83,696 புள்ளிகளிலும், நிஃப்டி 45 புள்ளிகள் சரிந்து 25,677 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Maruti Suzuki, Titan Company, Axis Bank, Dr Reddys Labs உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News November 3, 2025
டெல்டாவில் தனி கவனம் செலுத்தும் EPS

2021-ல் கொங்குவில் அதிக இடங்களை கைப்பற்றிய அதிமுக, டெல்டா, தென் தமிழகத்தில் கோட்டை விட்டது. தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைந்ததால், 2026-ல் தென்மாவட்டங்களில் கனிசமான வாக்குகளை பெறலாம் என நம்பும் EPS , நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தி, பூத் வாரியாக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்டப் பொறுப்பாளர்களுடன் EPS ஆலோசித்துள்ளார்.


