News November 23, 2024
வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி முன்னிலை

கேரளாவின் வயநாடு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 460 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்யன் மோக்ரியும் பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாசும் பின் தங்கியுள்ளனர். ஏற்கெனவே ராகுல் காந்தி வசம் இருந்த தொகுதி என்பதால் பிரியங்காவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தெரிகிறது.
Similar News
News August 19, 2025
தவெக மாநாடு அன்று மழை வெளுக்குமா?

மதுரையில் ஆக., 21-ல் நடக்கவுள்ள தவெகவின் 2-வது மாநாடு மழையால் தடைபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அன்றைய தினம் நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை அதீத வெப்பம் நிலவும் எனவும், மாலையிலும், இரவிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுக்கும் எனவும் தனியார் வானிலை ஆர்வலர் தெரிவித்துள்ளார். இதனால், மாநாட்டிற்கு செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 19, 2025
து.ஜனாதிபதி வேட்பாளராக மயில்சாமி அண்ணாதுரை?

துணை ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்துவது என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது INDIA கூட்டணி. இதற்காக, மகாத்மா காந்தியின் பேரனான துஷார் காந்தியின் பெயரை பரிந்துரைத்துள்ளாராம் NCP-ன் சரத் பவார். அதோடு, கட்சி சார்பு இல்லாத முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரையின் பெயரை திமுக பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றிய இறுதி முடிவை காங்., தலைவர் கார்கே இன்று எடுக்கவுள்ளார்.
News August 19, 2025
BREAKING: டி.ஆர்.பாலுவின் மனைவி காலமானார்

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (80) உடல்நலக் குறைவால் காலமானார். நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், திமுக மூத்த தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.