News November 23, 2024
தென்காசி எஸ்பி அலுவலகத்தில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று(நவ.,22) மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட குற்றப்பிரிவு ஆகியவற்றில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் மூர்த்தி ஆய்வினை மேற்கொண்டு அறிவுரை வழங்கினார். பின்னர் அனைத்து கோப்புகளையும் சரிவர முறையாக பராமரித்து வந்த காவல்துறையினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். தென்காசி எஸ்பி ஶ்ரீனிவாசன் உடனிருந்தார்.
Similar News
News August 9, 2025
தென்காசி அருகே கரடியை தேடும் ட்ரோன்

புளியங்குடி பகுதியில் விவசாயி பணிக்கு சென்ற பெண்களை கரடி கடித்து படுகாயம் அடைந்த நிலையில் கரடியை பிடிக்க 3ஆவது நாளாக வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். மாவட்ட வனத்துறை அலுவலர் அகில் நல்ல தம்பி தலைமையில் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு 3ஆவது நாளாக கரடி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
News August 9, 2025
தென்காசியில் ரக்க்ஷா பந்தன் விழா

தென்காசியில் ரக்க்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு ரக்க்ஷா அணிவிக்கும் விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட பாஜக துணைத் தலைவர் முத்துக்குமாருக்கு தென்காசி மாவட்ட ரக்க்ஷா பந்தன் குழுவினர் நேரில் சந்தித்து ரக்க்ஷா அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் பாஜக நிர்வாகிகள் மற்றும் ரக்க்ஷா பந்தன் குழுவினர் உட்பட பலர் உடன் இருந்தனர்.
News August 9, 2025
குற்றால அருவியில் நீர்வரத்து குறைவு

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலத்தில் தற்பொழுது சீசன் காலமாகும். தென்மேற்கு பருவமழை கடந்த 10 தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இல்லாததினால் காரணமாக அருவியில் நீர்வரத்து தற்போது குறைய தொடங்கியுள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால அருவியில் குளிப்பதற்கு திரண்டு வந்தனர்.