News March 21, 2024

நாமக்கல்: 24/7 தயார் நிலையில் அதிகாரிகள்

image

மக்களவைத் தேர்தல் 24 நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. தேர்தலுக்காக நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் 24/7 நடைபெற்று வருகிறது நாமக்கல் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் நாமக்கல்லில் கல்லூரி மாணவ மாணவிகளின் மனித சங்கிலி நடைபெற்றது மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி மரு.ச.உமா கலந்து கொண்டார்.

Similar News

News April 21, 2025

நாமக்கல்லில் 25-ம் தேதி இலவச பயிற்சி!

image

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் (கேவிகே) வருகிற 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 10 மணிக்கு ‘நன்னீர் மீன் வளர்ப்பு’ என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ள 04286-266345, 266650, 7358594841 என்ற தொலைபேசி எண்களை தொடர்கொள்ளலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News April 21, 2025

நம்பிக்கை தரும் நாமக்கல் காலபைரவர்

image

நாமக்கல் மாவட்டம் அடுத்த அணியாபுரத்தில் அமைந்துள்ளது காலபைரவர் கோயில். மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News April 21, 2025

நாமக்கல்லில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

image

வெண்ணந்தூர் அருகே கடந்த 7-ம் தேதி 1,610 கிலோ ரேஷன் அரிசியுடன் கைதான சேலத்தை சேர்ந்த கோபால் (49) மற்றும் பள்ளிப்பாளையம் அருகே கத்தி காட்டி மிரட்டிய வழக்கில் கைதான சசிகுமார் (30) ஆகிய இருரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இந்தநிலையில் இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!