News November 23, 2024

தேசிய அளவில் திருப்பூர் மாணவர் அசத்தல்

image

கொல்கத்தாவில், ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், தேசிய சதுரங்க போட்டி நவ. 19 முதல், 21ம் தேதி வரை மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. அதில், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், தமிழக அணி சார்பில், 20 வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். அவர்களில், ஒருவரான, திருப்பூர், நெருப்பெரிச்சல், திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் கோகுல்கிருஷ்ணா, 6-4 செட் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

Similar News

News August 5, 2025

திருப்பூர்: ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு தொடக்கநிலை மற்றும் புத்தாக்கத் திட்டம் (TANSIM) மூலம், StartupTN திட்டத்தில் காலியாக உள்ள Project Associate பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 12ம் தேதிக்குள்,<> https://startuptn.in/<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 5, 2025

திருப்பூரில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை (ஆக.6) காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை, திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, கருவம்பாளையம், ஆலங்காடு, கல்லப்பாளையம், வெங்கடாசலபுரம், கோழிப்பண்ணை ஒரு பகுதி, அணைப்பாளையம், ராயபுரம், மிலிட்டரி காலனி, பெரியாண்டிபாளையம், கொங்கனகிரி, கோவில், ரங்கநாதபுரம், காலேஜ் ரோடு, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News August 5, 2025

திருப்பூர் மாநகரில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று இரவு பாதுகாப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைக்கு நேரில் உள்ள அதிகாரிகளை தொடர்புகொள்வதோடு, 100 எண்ணையும் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!