News November 23, 2024

கள்ளக்குறிச்சியில் கனமழைக்கு வாய்ப்பு

image

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளதாகவும், நவம்பர் 25 முதல் 28 ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வரும் 27-ஆம் தேதி கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை, விழுப்புரம்,ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News September 11, 2025

கள்ளக்குறிச்சி: வெட்டிய தலையுடன், சிறையில் சரண்

image

கள்ளக்குறிச்சி, மலைக்கோட்டாலம் கிராமத்தில் லட்சுமி மற்றும் தங்கராசு ஆகியோர் தலையை துண்டித்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த பின், பேருந்தில் ஏறி வேலூரில் உள்ள வேலூர் மத்திய சிறைக்கு சென்ற தன்னை கைது செய்யுமாறு போலீசாரிடம் கூறினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறை காவலர்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

News September 11, 2025

கள்ளக்குறிச்சி: ரூ. 1000 பெற, இந்த 5 ஆவணங்கள் போதும்!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <>இந்த லிங்கில் <<>>கிளிக் செய்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

News September 11, 2025

கத்தியை காட்டி மிரட்டி கொலைமிரட்டல் விடுத்த நபர் கைது

image

ஆசனூரை சேர்ந்த சகுந்தலாவும் வெங்கடேசனும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். கடந்த 3-ம் தேதி வெங்கடேசன் மது போதையில் இரு வீட்டாரின் இடையில் உள்ள சந்தில் சிறுநீர் கழித்ததாகவும், இதனை கேட்ட சகுந்தலாவை வெங்கடேசன் கத்தியை காட்டி கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரின் பேரில் வெங்கடேசனை இன்று போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!