News March 21, 2024
கறம்பக்குடி வேட்பாளர் அறிவிப்பு

கறம்பக்குடி தாலுக்கா குழந்திரான்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கருப்பையா, இவர் தற்போது புதுக்கோட்டை நகரில் வசித்து வருகிறார். கருப்பையா அரசு ஒப்பந்ததாரராக அதிமுக ஆட்சி காலத்தில் உருவெடுத்து தற்போது அரசு பணிகளில் ஒப்பந்தம் மூலம் பணிகள் செய்து வருகிறார். தற்போது அதிமுக சார்பில் இன்று திருச்சி திருச்சி மக்களவைத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News January 10, 2026
புதுக்கோட்டை: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

புதுக்கோட்டை மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன்(Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News January 10, 2026
புதுக்கோட்டை மக்களே! இது உங்களுக்கு தெரியுமா?

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்
1. மொத்த பரப்பளவு: 4,663 ச.கி.மீ
2. மொத்த மக்கள்தொகை: 16,18,345 (2011)
3. சட்டமன்ற தொகுதிகள்: 6
4. பாராளுமன்ற தொகுதி: 4
5. வருவாய் கிராமங்கள்: 763
6. ஊராட்சி ஒன்றியங்கள்: 13
7. வட்டங்கள்: 12
8. பேரூராட்சிகள்: 8
9. மாநகராட்சி: 1
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!
News January 10, 2026
புதுகை: வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற<


