News November 23, 2024

திசை மாறும் போர்: புதின்

image

உக்ரைனுடனான போர் திசை மாறுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனக் கூறியுள்ள அவர், இந்தப் போர் உலகளாவிய மோதலை நோக்கி விரிவடைந்து வருகிறது என்றார். மேலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அதிகரித்தால் தீர்க்கமாக பதிலளிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் 3ஆவது ஆண்டை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 19, 2025

நகை கடன்… HAPPY NEWS

image

தங்கம் விலை உயர்ந்து வருவதையொட்டி, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன் தொகை கிராமுக்கு 7,000-ஆக உயர்த்தப்பட்டது. இந்த அறிவிப்பு இந்த வாரத்தில் இருந்து அமலுக்கு வருகிறது. முன்னதாக, 1 கிராம் தங்கத்துக்கு ₹6,000 மட்டுமே கடனாக வழங்கப்பட்டு வந்தது. தீபாவளி செலவை கணக்கில் கொண்டு மக்களுக்கு தாமதமின்றி கடன் வழங்க வேண்டும் எனவும் கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.

News October 19, 2025

47 முறை ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்: காஸா ஊடகம்

image

போர்நிறுத்த ஒப்பந்தத்தை, இஸ்ரேல் 47 முறை மீறியதாக காஸா ஊடகம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் 38 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 143 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அனைத்து பிணைக்கைதிகளின் உடல்களும் ஒப்படைக்கப்படும் வரை, காஸாவுக்கு உதவி பொருள்களை எடுத்து செல்லும் முக்கிய வழியான ரஃபா எல்லை திறக்கப்படாது என்று இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

News October 19, 2025

இந்தியில் வாழ்த்து சொன்ன சேகர்பாபு

image

துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 800 வடஇந்திய குடும்பங்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு பரிசு பொருள்களை வழங்கி அமைச்சர் சேகர்பாபு இந்தி மொழியில் வாழ்த்து தெரிவித்தார். இதன்பின் அவர் பேசுகையில், வடஇந்திய தொழிலாளர்களுக்கு முழுமையாக பாதுகாப்பு வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாகவும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்கு உங்களுடைய ஆதரவு வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

error: Content is protected !!