News March 21, 2024
பொள்ளாச்சி தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

நீண்ட காலமாக அதிமுக வசம் இருந்த பொள்ளாச்சித் தொகுதியை கடந்த 2019ஆம் ஆண்டுதான் திமுக வென்றது. 9 முறை அதிமுக வென்ற தொகுதியை திமுக-வின் சார்பில் போட்டியிட்ட கு.சண்முகசுந்தரம் வெற்றிபெற்றார். ஆனால், இம்முறை வேட்பாளரை திமுக மாற்றியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த ஈஸ்வரசாமி இத்தொகுதியில் போட்டியிடவுள்ளார். உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகியவை பொள்ளாச்சித் தொகுதிக்குள் அடங்கும்.
Similar News
News January 30, 2026
திருப்பூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் மேட்டுப்பாளையம் பகுதியில் நாளை (ஜன.31) மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. இதனால் தலைமை நீரேற்று நிலையத்தில், 4வது குடிநீர் திட்டத்தில் நீரேற்றும் பணி முற்றிலும் தடைபடும். எனவே திருப்பூர் மாநகராட்சியில் வரும் பிப்1ம் தேதி மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படாது. குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்தவும், திருப்பூர் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
News January 30, 2026
திருப்பூர்: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

திருப்பூர் மக்களே உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே <
News January 30, 2026
தாராபுரம் அருகே விபத்து

தாராபுரம் பைபாஸ் சாலையில் உள்ள ஒட்டன்சத்திரம் சாலையில் இன்று ஆம்னி காரும், இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


