News November 22, 2024
சேலம் புத்தகத் திருவிழா: பணிகள் மும்முரம்

சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் வரும் நவம்பர் 29-ம் தேதி புத்தகத் திருவிழா தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் 150-க்கும் மேற்பட்ட புத்தக விற்பனை அரங்குகளுடன், அறிவுச்சார்ந்த பல்வேறு காட்சி அரங்குகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News January 1, 2026
சேலம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
News January 1, 2026
மேட்டூரில் அம்மன் நகைகளை திருடிய ஆசாமி கைது!

மேட்டூர் தூக்கணாம்பட்டி காளியம்மன் கோயிலில் கடந்த மாதம் 1ஆம் தேதி அம்மன் கழுத்தில் இருந்த தங்கத் தாலி, வெள்ளி வேல் திருடப்பட்டது. இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜேஷ் (42) என்பவர் நகைகளை திருடி அவற்றை ஓமலூர் சின்னக்கடை வீதியில் உள்ள மெருகு கடையில் விற்றது தெரியவந்தது. இதனையடுத்து நகைகளை கைப்பற்றிய போலீசார் ராஜேஷை சிறையில் அடைத்தனர்.
News January 1, 2026
சேலம் வாக்காளர்களுக்கு சூப்பர் UPDATE!

சேலம் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!


