News March 21, 2024
பொள்ளாச்சி தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

நீண்ட காலமாக அதிமுக வசம் இருந்த பொள்ளாச்சித் தொகுதியை கடந்த 2019ஆம் ஆண்டுதான் திமுக வென்றது. 9 முறை அதிமுக வென்ற தொகுதியை திமுக-வின் சார்பில் போட்டியிட்ட கு.சண்முகசுந்தரம் வெற்றிபெற்றார். ஆனால், இம்முறை வேட்பாளரை திமுக மாற்றியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த ஈஸ்வரசாமி இத்தொகுதியில் போட்டியிடவுள்ளார். தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி,வால்பாறை(தனி) ஆகியவை இத்தொகுதிக்குள் அடங்கும்.
Similar News
News August 13, 2025
கோவை – அந்தமான் இடையே விமான சுற்றுலா

கோவையிலிருந்து அந்தமானுக்கு, சிறப்பு விமான சுற்றுலாவை இந்திய ரயில்வே, உணவு, சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) அறிவித்துள்ளது. இது (செப்.23)ம் தேதி துவங்குகிறது. 6 இரவு, 7 பகல் அடங்கியது. விமான கட்டணம், தங்கும் வசதி, போக்குவரத்து, கப்பல் பயணச்சீட்டுகள், உணவு ஆகியவை அடங்கும். சுற்றுலா கட்டணம், 54,500 ரூபாய். மேலும் விபரங்களுக்கு, 90031-40655, www.irctctourism.com ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
News August 13, 2025
கோவை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

கோவை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News August 13, 2025
கோவையில் இலவச கார் ஓட்டுநர் பயிற்சி APPLY NOW

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச இலகுரக வாகன ஓட்டுநர் (Light Motor Vehicle Driver) பயிற்சி வழங்கப்படவுள்ளது. 45 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், கார், வேன், சிறிய ரக லாரி ஓட்டுநர் பயிற்சிகள், வாகன பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 8வது முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க <