News November 22, 2024
திருச்சியில் மீண்டும் ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு

திருச்சி அருகே அந்தநல்லூர் சிவன் கோவில் படித்துறையில் கடந்த அக்.30-ஆம் தேதி ராக்கெட் லாஞ்சர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருச்சி ஜீயபுரத்தில் இன்று (நவ.22) மீண்டும் ஒருமுறை ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் மீன்பிடிக்க வலையை வீசிய போது அதில் மீன்களுக்கு பதிலாக ராக்கெட் சிக்கியுள்ளது.
Similar News
News December 26, 2025
டிரைவர் வேலை: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்டம், நவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள ஒரு ஓட்டுநர் பணி நிரப்பப்பட உள்ளது. மாத ஊதியமாக ரூ.13,500 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர், திருச்சி டிவிஎஸ் டோல்கேட் ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள, மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் வரும் 29-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 26, 2025
திருச்சி: மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமிக்கு, அவரது தந்தையே தொடர்ச்சியாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், சிறுமியின் தந்தை கடந்த மாதம் 27-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் பரிந்துரையின் பேரில் சிறுமியின் தந்தை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
News December 26, 2025
திருச்சி: லாரி கவிழ்ந்து விபத்து; 11 பேர் காயம்

தொட்டியம் அருகே சீத்தப்பட்டி பகுதியில் இருந்து மரவள்ளிக் கிழங்குகளை ஏற்றிக் கொண்டு, லாரி ஒன்று நாமக்கல் நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியில் ஏற்றப்பட்ட கிழங்குகள் மீது 11 தொழிலாளர்கள் அமர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் காட்டுப்புத்தூர் அருகே லாரி சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், வெளியே அமர்ந்திருந்த 11 பேர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.


