News November 22, 2024
மக்களவையில் பிரியங்கா குரல் ஒலிக்குமா?

2019, 2024 தேர்தல்களில் வயநாட்டில் 2 முறை போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி வாகை சூடினார். ஆனால் 2024இல் ரேபரேலியிலும் வென்றதால் வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டியிடுகிறார். இதில் பிரியங்கா வென்றால், மக்களவையில் ராகுல், பிரியங்கா குரல் கூட்டாக ஒலிக்கும். இத்தேர்தல் முடிவு நாளை வெளியாகவுள்ளது. முடிவை அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்க.
Similar News
News August 21, 2025
ஓசி என ஏளனம் செய்யும் திமுக அமைச்சர்கள்: CTR நிர்மல்

விஜய்க்கு அனுபவம் இல்லை எனக் கூறும் திமுக அமைச்சர்கள் மக்களை ஓசி என ஏளனம் செய்வதாக CTR நிர்மல்குமார் கூறியுள்ளார். நேர்மையானவர்களை அரசியலில் நுழைய விடாமல் திராவிட கட்சிகள் மக்களை சுரண்ட நினைப்பதாக கடுமையாக விளாசிய அவர், திராவிடம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் கும்பலுக்கு வரும் தேர்தல் முடிவு கட்டும் என கடுமையாக சாடியுள்ளார்.
News August 21, 2025
தவெக யாருடன் கூட்டணி.. மாநாட்டில் விஜய் அறிவிப்பு

2026 தேர்தலில் DMK- TVK இடையேதான் போட்டி என விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது. அப்படி இருக்கும்போது, TVK எப்படி ஒட்டும் என்றார். மேலும், நேரடி அடிமை கூட்டணியுடன் ஒருபோதும் தவெக இணையாது என்றார். மேலும், MGR ஆரம்பித்த ADMK, தற்போது பொருந்தா கூட்டணியில் சிக்கி தவிப்பதாக அதிமுகவையும் சாடினார். விஜய்யின் கூட்டணி முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.
News August 21, 2025
மாநாட்டுக்கு தடைகளை ஏற்படுத்திய அமைச்சர்: ஆதவ்

மதுரை தவெக மாநாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி பல தடைகளை ஏற்படுத்தியதாகவும், அவை அனைத்தையும் உடைத்தெறிந்து மாநாட்டை நடத்தி காட்டியுள்ளதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். உண்மையை சொன்னதால் அமைச்சரவையில் இருந்து பிடிஆர் ஓரங்கட்டப்பட்டார் எனக்கூறிய அவர், மதுரையில் தற்போது ஆதிக்கம் செலுத்தும் அமைச்சர் மூர்த்தி சமூகநீதி காவலரா?, அவரை ஏன் திமுக ஆதரிக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.