News November 22, 2024
தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் வலிறுத்தால்

சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாயவிலைக்கடைகளில் துவரம்பருப்பு வினியோகிக்கப்படவில்லை. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பசியாறுவதற்கு நியாயவிலைக் கடைகளில் மலிவு விலையில் வழங்கப்படும் பருப்பு மிகவும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு தடையின்றியும், தாமதமின்றியும் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News September 17, 2025
திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்: போக்குவரத்து மாற்றம்

சென்னையில் நாளை திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற உள்ளதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 8மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் ஈவேரா சாலை,ராஜாஜி சாலை, உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் உள்ள மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
News September 16, 2025
20 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்

நெல்லை-சென்னை இடையே 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் 20 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. பயணிகளின் வருகை அதிகரிப்பால் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் பயணிகளின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
News September 16, 2025
பிரான்ஸ் மாகாணத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

பிரான்ஸ் நாட்டின் வால் டி லாயர் மாகாணத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கலாச்சார பரிமாற்றம் மற்றும் சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று
கையெழுத்திடப்பட்டது. சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.