News November 22, 2024
செல் நம்பர் போதும்.. அத்தனை படங்களும் இலவசம்

அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்கள் கட்டணத்தை வசூலித்து கொண்டே அனைத்து சேவைகளையும் அளிக்கின்றன. இந்நிலையில், மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனம் WAVES என்ற புதிய ஓடிடி தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தளத்தில் நமது செல்போன் எண்ணை உள்ளிட்டு நுழைந்தால் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் படம், வெப் சீரீஸ், டிவி நேரலை இலவசமாக காணலாம். SHOPPING சேவையையும் இத்தளம் அளிக்கிறது.
Similar News
News August 14, 2025
அம்பானி ₹28 லட்சம் கோடி சொத்துகளுடன் முதலிடம்

முகேஷ் அம்பானியின் குடும்பம் ₹28 லட்சம் கோடி சொத்துகளுடன் இந்தியாவின் பணக்கார குடும்பமாகத் முதலிடத்தில் உள்ளது. இது அதானி குடும்பத்தின் ₹14.01 லட்சம் கோடி சொத்து மதிப்பைவிட 2 மடங்குக்கு மேல் அதிகம். இருப்பினும், முதல் தலைமுறை தொழில்முனைவோர்களால் உருவாக்கப்பட்ட குடும்ப நிறுவனங்களில் அதானி குடும்பம் முதலிடத்தில் உள்ளார். ஹுருன், பார்க்லேஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
News August 14, 2025
உங்களை நீங்களே ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்து பாருங்க!`

இலக்கை அடைய முடியாமல், எங்கு எதனால் தோற்கிறோம் என தவிப்பவர்கள் தான் அதிகம். அப்படியானவர் நீங்கள் என்றால், உங்களை நீங்களே ‘போஸ்ட் மார்ட்டம்’ பண்ணிக்கோங்க. நம் எங்கு தவறு செய்தோம் என யாராலும் சொல்ல முடியாது. நாமளே புரிந்து கொண்டால்தான் உண்டு. அதற்கு, உங்களை நீங்களே போஸ்ட் மார்ட்டம் செய்து பாருங்க, தவறு என்ன என்பது புரியும். தவறை தெரிந்து கொண்டால் மட்டும் போதாது, அதனை ஒப்புக்கொள்ளுங்கள்.
News August 14, 2025
இந்தியர்கள் சிறுநீர் கழித்தாலே. BJP தலைவர் கிண்டல்

சிந்து நதி நீரை நிறுத்தினால் இந்தியாவிற்கு தக்க பாடம் புகட்டப்படும் என்று பாக்., PM ஷெபாஸ் ஷெரிஃப் கூறியிருந்தார். இந்நிலையில், 140 கோடி இந்தியர்களும் சிறுநீர் கழிக்கும் வகையில் ஒரு அணையைக் கட்டி, அதைத் திறந்தாலே பாக்.,கில் சுனாமி ஏற்பட்டுவிடும் என BJP தலைவர் மிதுன் சக்கரவர்த்தி ஆவேசமாக கூறியுள்ளார். பாக்., மக்களிடம் தனக்கு எந்த விரோதமும் இல்லை என்ற அவர், இதை பூட்டோவுக்காக சொன்னது என்றார்.