News November 22, 2024

SKவிடம் மன்னிப்பு கேட்ட RJ பாலாஜி

image

நடிகர் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டது குறித்து நடிகரும், இயக்குநருமான RJ பாலாஜி மனம் திறந்துள்ளார். ‘சொர்க்கவாசல்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், 2014இல் தனியார் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது, சில மேடைகளில் SK அழுததை வைத்து கிண்டல் செய்ததாகவும் பிறகு அதை எண்ணி மனம் வருந்தி அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளார். ‘சொர்க்கவாசல்’ படம் வரும் 29ஆம் தேதி ரிலீஸாகிறது.

Similar News

News August 20, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 20 – ஆவணி 4 ▶ கிழமை: புதன் ▶ நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶ எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶ குளிகை: 10:30 AM – 12:00 PM ▶ திதி: துவாதசி ▶ சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.

News August 20, 2025

உலக புகைப்பட தினம்: போட்டோ எடுத்து மகிழ்ந்த EPS

image

உலக புகைப்பட தினமான நேற்று வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார் இபிஎஸ். அப்போது, கூட்டத்தில் உரையாடிய பின், பிரச்சார வாகனத்திலிருந்த போட்டோகிராபரிடம் கேமராவை வாங்கி, அங்கு கூடியிருந்த மக்களை இபிஎஸ் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். இதனைப் பார்த்த மக்கள் ஆரவாரம் செய்தனர். மேலும், தனது X பக்கத்திலும் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். Share it!

News August 20, 2025

இன்ஃப்ளூயென்சர்கள் இவ்ளோ சம்பாதிக்கிறார்களா?

image

சோஷியல் மீடியாவில் சம்பாதிக்க பிரபலமாகும் சிலர், ஆபாச கன்டென்ட் ரீல்ஸ் பதிவிட்டே மில்லியன் கணக்கில் ஃபாலோயர்களை ஈர்த்துவிடுகிறார்கள். அதன்பின், அவர்களை தூண்டும் வகையில் ஒரு வீடியோ போட்டு, பிரைவேட்டாக பார்க்க சப்ஸ்கிரைப் செய்ய சொல்கின்றனர். இப்படி இன்ஃப்ளூயென்சர் ஒருவர் மாத சப்ஸ்கிரிப்ஷன் ₹399 என்று அறிவிக்க 8,731 பேர் சேர்ந்துள்ளனர். இதன்மூலம் அவர் ₹35 லட்சம் சம்பாதித்துள்ளாராம். என்ன சொல்றீங்க?

error: Content is protected !!