News November 22, 2024
டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் உயிரிழப்பு

காட்டுப்பாக்கம் ஸ்ரீராம் நகரை சேர்ந்த சுப்பிரமணி இன்று ஏரிக்கரை வழியாக டிராக்டரில் செல்லும்போது மண்சரிவு ஏற்பட்டு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிராக்டர் அடியில் சிக்கிக்கொண்ட சுப்பிரமணியத்தை, அந்த வழியாக சென்றவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் டிராக்டரை தூக்கி படுகாயங்களுடன் கிடந்த அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News August 13, 2025
ராணிப்பேட்டை ஆட்சியர்: கழிவுநீர் கால்வாய் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, மேல்விஷாரம் நகராட்சியில் கழிவுநீர் செல்லும் கால்வாய்களை நேரில் ஆய்வு செய்தார். பாலாற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க, தனியான கால்வாய் அமைக்கும் பணி மற்றும் சுத்திகரிப்பு நிலையம் கட்டமைப்பின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், பணிகள் தரமாகவும் விரைவாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
News August 13, 2025
ராணிப்பேட்டை: ரூ.62,000 சம்பளத்தில் வேலை!

ராணிப்பேட்டை மாக்களே, தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரியில் தற்போது காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th போதுமானது. சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29.08.2025 தேதிக்குள் <
News August 13, 2025
மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் பொதுமக்களிடமிருந்து 30 மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். டிஎஸ்பி ராமச்சந்திரன் ரமேஷ் ராஜ் உடன் இருந்தனர்.