News November 22, 2024
திமுகவுக்கு நிரந்தர வனவாசம்.. ஜெயக்குமார் ஆரூடம்

மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், அனைத்து கட்சிகளும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு காய் நகர்த்தி வருகின்றன. இத்தேர்தல் குறித்து பேசிய அதிமுக EX நிதியமைச்சர் ஜெயக்குமார், 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும், அதன்பிறகு திமுகவுக்கு நிரந்தர வனவாசம் என்று சாடியுள்ளார். ஜெயக்குமாரின் கருத்து குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீங்க. கீழே கமெண்டை பதிவிடுங்க.
Similar News
News August 31, 2025
நாளை முதல் டீ, காபி விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் நாளை(செப்.1) முதல் டீ, காபி உள்ளிட்டவைகளின் விலை உயர்த்தப்படுவதாக டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, இனி டீ – ₹15, பால் – ₹15, லெமன் டீ – ₹15, காபி, ஸ்பெஷல் டீ – ₹20, ராகி மால்ட் – ₹20, சுக்கு காபி – ₹20, பூஸ்ட் – ₹25, ஹார்லிக்ஸ் – ₹25 என பட்டியலிடப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து மற்ற நகரங்களிலும் விரைவில் டீ, காபி விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. SHARE IT.
News August 31, 2025
பிஹார் போல் கோட்டை விட கூடாது: KN நேரு

வாக்காளர் பட்டியலில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என DMK நிர்வாகிகளுக்கு KN நேரு அறிவுறுத்தியுள்ளார். பிஹார் போல் வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்தாமல் விட்டுவிடக்கூடாது எனவும் ஒன்றிய செயலாளர்கள் முன்னெச்சரிக்கையாக பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில், பூத் கமிட்டி, புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தும் பணியில் திமுக தீவிரம் காட்டி வருகிறது.
News August 31, 2025
இந்த வாரத்தில் பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

பள்ளிகளுக்கு இந்த வாரத்தில் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. செப்.5-ம் தேதி(வெள்ளிக்கிழமை) மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறையாகும். அதனைத் தொடர்ந்து செப்.6(சனிக்கிழமை), செப்.7(ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறையாகும். வரும் 15-ம் தேதி முதல் காலாண்டு தேர்வு தொடங்குவதால் இந்த தொடர் விடுமுறை, மாணவர்கள் தேர்வுக்கு தயாராக மிகவும் பயனுள்ள வகையில் அமையும். SHARE IT.