News November 22, 2024
பிள்ளைகளுக்காக உணவை குறைத்த 25% பெற்றோர்!

கனடாவில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் 25% பெற்றோர் குழந்தைகளுக்கு உணவளிக்க தங்கள் உணவைக் குறைத்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. Salvation Army என்ற தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், கனடாவில் பணவீக்கம் உயர்ந்து வரும் நிலையில், வீட்டு வாடகை, மளிகையின் விலை அதிகரித்துள்ளது. இதனால் 90% மக்கள் தங்களது மளிகை செலவைக் குறைத்துள்ளனர். 1-4 பெற்றோர் பிள்ளைகளுக்காக உணவைக் குறைத்துள்ளனர்.
Similar News
News August 31, 2025
BREAKING: வெளுத்து வாங்கும் கனமழை

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று(ஆக.31) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலையில் 17 மாவட்டங்களுக்கு மழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் நள்ளிரவில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டித் தீர்த்ததால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
News August 31, 2025
BREAKING: புதிய டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக(பொறுப்பு) வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார். டிஜிபி சங்கர் ஜிவால் இன்று பணி ஓய்வு பெறும் நிலையில், நிர்வாக பிரிவு டிஜிபியாக உள்ள வெங்கடராமனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நாகையை சேர்ந்த இவர், 1994-ல் IPS ஆக தேர்வானவர். பல மாவட்டங்களில் SP ஆக பணியாற்றியதோடு, முக்கியத்துவம் வாய்ந்த CBCID, நிர்வாக பிரிவிகளில் அரசின் பாராட்டை பெற்றவர்.
News August 31, 2025
PM மோடி சீனா விசிட் மூலம் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

7 ஆண்டுகளுக்கு பிறகு சீனா சென்றுள்ள PM மோடி, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இதனிடையே, *எல்லை பிரச்னையில் இருநாடுகளிடையே ஒருமித்த கருத்து. *கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடக்கம். *இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை உள்ளிட்ட பல மாற்றங்கள் ஏற்படவிருப்பதாக PM மோடி தெரிவித்துள்ளார். PM மோடியின் இப்பயணம் IND – USA இடையேயான வர்த்தக பிரச்னையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.