News November 22, 2024
கடலூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் நவ.25 (திங்கள்) முதல் நவ.28 (வியாழன்) வரை கடலூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHAREIT
Similar News
News August 18, 2025
வேலைவாய்ப்பு முகாம்; ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் வருகின்ற ஆக.23ம் தேதி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் இளைஞர்கள் அனைவரும் கல்வி சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 94440 94260 APO(S&P), 94440 94258 APO(IB&CB), 94440 94259 APO(IF), 94440 94262APO (M&E) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 17, 2025
கடலூர்: டிகிரி போதும்… LIC நிறுவனத்தில் வேலை

கடலூர் மக்களே வேலைவாய்ப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது.காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணிகள் நிரப்படவுள்ளது. (AAO) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிகுள் <
News August 17, 2025
புவனகிரி லயன்ஸ் சங்கம் சார்பில் கண் தானம்

கடலூர் மாவட்டம் கீழ் புவனகிரி சுண்ணாம்புகார தெருவை சேர்ந்த மல்லிகா என்பவர் காலமானார். இந்நிலையில், அவரது இரு கண்களையும் தானமாக பெற்று புதுவை தனியார் கண் மருத்துவமனைக்கு புவனகிரி அரிமா சங்கம் சார்பில் நேற்று மாலை வழங்கப்பட்டது. மேலும் கண்களை தானமாக வழங்கிய அவருடைய குடும்பத்தாருக்கும் தானம் பெற உதவிய சங்கத்தினருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.