News March 21, 2024
75 ஆண்டுகளில் இதுபோல் நடந்ததில்லை

பொன்முடி வழக்கில் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அழுத்தமான வாதத்தை தமிழக அரசு முன்வைத்து வருகிறது. அதில், ” 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்ய முடியாது என கூறுகிறார். ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வந்து நீதி பெற வேண்டியுள்ளது. அரசின் இயல்பான செயல்பாட்டை அவர் தொடர்ந்து தடுக்கிறார். இது ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல” எனக் கூறினர்.
Similar News
News April 28, 2025
சென்னையில் பாகிஸ்தானியர் காலமானார்

சென்னையில் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானியர் காலமானார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டிருந்தன. இந்நிலையில், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தானியர் உயிரிழந்தார். இறந்த நபரின் உடலையும், அவரின் தாயையும் பாகிஸ்தானுக்கு அனுப்ப அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
News April 28, 2025
பாலிவுட்டை மிரள வைத்து படம்.. அக்டோபரில் ரீ-ரிலீஸ்

இந்திய சினிமாவில் ராஜமௌலியின் ‘பாகுபலி’ முதல் பாகத்திற்கு என்றுமே தனி இடம் உண்டு. 2015 காலகட்டத்தில் தென்னிந்திய படம் ஒன்று ₹600 கோடியை தாண்டுவது பெரும் சாதனை. அந்த சாதனையை படைத்து பாலிவுட்டை வியக்க வைத்தது ‘பாகுபலி’ – 1. ரசிகர்கள் கொண்டாடும் ‘பாகுபலி’ வரும் அக்டோபர் மாதம் ரீ – ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீங்க தியேட்டர்ல மீண்டும் ‘பாகுபலி’ பார்க்க ரெடியா?
News April 28, 2025
பால்வளத்துறையை கையில் எடுத்த மனோ தங்கராஜ்

மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அவருக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது திடீரென்று அமைச்சரவையில் இருந்து அவர் நீக்கப்பட்டார். சுமார் 7 மாதம் கழித்து அமைச்சரான அவருக்கு மீண்டும் அதே துறையை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். தேர்தல் வர இன்னும் ஓர் ஆண்டே இருக்கும் நிலையில், அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.