News November 22, 2024

உங்க வீட்டில் TOILET இருக்கா? ஆய்வு நடத்த ஆபீசர்ஸ் வறாங்க

image

அனைத்து வீடுகளிலும் கழிப்பிடம் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற திட்டத்துடன் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அண்மையில் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், ஒவ்வொரு வீட்டுக்கும் உள்ளாட்சி அதிகாரிகளை அனுப்பி, TOILET உள்ளதா? என சோதனை நடத்தும்படியும், TOILET இல்லாத வீடுகளில் புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது.

Similar News

News August 31, 2025

இந்தியாவும் சீனாவும் இனி நண்பர்கள்!

image

PM மோடி-சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்திப்பை உலகமே உற்று நோக்குகிறது. இச்சந்திப்பின் போது, இந்தியாவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும் எனவும் இருநாடுகளின் வெற்றியில் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்றும் சீன அதிபர் பேசியுள்ளார். அதோடு, டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அவர் கூறியிருப்பது, USA-வுக்கு அவர் விடுக்கும் மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

News August 31, 2025

MLC உறுப்பினராகிறார் Ex கிரிக்கெட் வீரர் அசாருதீன்

image

முன்னாள் கிரிக்கெட்டர் அசாருதீன் தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினராக (MLC) தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவரை Governor Quota-வின் கீழ் பரிந்துரைக்க முடிவெடுத்துள்ளது. இது குறித்து அசாருதீன் வெளியிட்டுள்ள பதிவில், காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து, ஒருமைப்பாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் மாநிலத்திற்கு சேவை செய்வேன் என குறிப்பிட்டுள்ளார்.

News August 31, 2025

BREAKING: வெளுத்து வாங்கும் கனமழை

image

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று(ஆக.31) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலையில் 17 மாவட்டங்களுக்கு மழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் நள்ளிரவில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டித் தீர்த்ததால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

error: Content is protected !!