News November 22, 2024
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு 01.11.2024 அன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டமானது, நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து நாளை காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது. எனவே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 12, 2025
மாணவனின் விரலை கடித்த நடத்துனர்

ஆவடியில் இருந்து நேற்று முன்தினம் மாலை பெரியபாளையம் நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் 70க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர் அப்போது சில கல்லூரி மாணவர்கள் பணியில் தொங்கியபடி பயணம் செய்தனர். இதனால் நடத்துனர் மாணவர்களை உள்ளே வரும்படி கூறியுள்ளார். அப்போது ஒரு மாணவன் நடத்துனரை கை நீட்டி பேசியதால் ஆத்திரத்தில் மாணவனின் விரலை நடத்துனர் கடித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 12, 2025
போட்டித்தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு

திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNUSRB போன்ற முகாம்களுக்கு கட்டணமில்லா மாதிரி தேர்வுகள் 13.09.2025 மற்றும் 20.09.2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 044-27660250 / 8489866698 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
News September 11, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.