News March 21, 2024
ஆளுநருக்கு 24 மணி நேரம் கெடு

பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பது தொடர்பான வழக்கில் தமிழக ஆளுநர் R.N.ரவிக்கு உச்ச நீதிமன்றம் 24 மணி நேரம் கெடு விதித்துள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது எனக் கூறியதற்காக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, சரியான முடிவை ஆளுநர் எடுக்காவிட்டால் நாங்களே உத்தரவு பிறப்பிப்போம் என எச்சரித்துள்ளது.
Similar News
News April 28, 2025
பால்வளத்துறையை கையில் எடுத்த மனோ தங்கராஜ்

மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அவருக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது திடீரென்று அமைச்சரவையில் இருந்து அவர் நீக்கப்பட்டார். சுமார் 7 மாதம் கழித்து அமைச்சரான அவருக்கு மீண்டும் அதே துறையை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். தேர்தல் வர இன்னும் ஓர் ஆண்டே இருக்கும் நிலையில், அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
News April 28, 2025
ஒரு நாள் அரசு பொது விடுமுறை..

வரும் வியாழக்கிழமை (மே 1) உழைப்பாளர் தினத்தையொட்டி, பொதுவிடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கெனவே கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், மே 1-ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேபோல், தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் அறிவுத்தப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூட வேண்டும்.
News April 28, 2025
மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் மனோ தங்கராஜ்

மனோ தங்கராஜ்-ஐ அமைச்சராக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 7 மாதங்கள் கழித்து மீண்டும் அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் CM ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.