News November 22, 2024
லாரி டிரைவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

கருமண்டபத்தை சேர்ந்த சோலை பாண்டியன் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மல்லிகா, மகன் சுரேஷ்குமார். இவர்கள் 3 பேரும் நேற்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணிஅளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. உடனே, எழுந்து பார்த்தபோது அவரது அறையில் நாட்டுவெடிகுண்டு வீசி ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து ஜன்னல் திரை எரிந்து கிடந்தது. உடனே, கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர்.
Similar News
News December 8, 2025
திருச்சி: ஆட்டோ மோதி பரிதாப பலி

பெருகமணி ரயில்வே ஸ்டேஷன் அருகே பெட்டவாய்த்தலை நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம் மீது, பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சென்ற ஆட்டோ நேற்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டூவீலரில் வந்த கொடியாலம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 7, 2025
திருச்சில் அரிய வாகை ஆமைக் குஞ்சுகள் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுபிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அதில் மலேசியாவை சேர்ந்த இரு பயணிகள் கடத்திவந்த 5,061 ஆமைக்குஞ்சுகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஆமைக்குஞ்சுகளை கடத்திவந்த இரண்டு பேரிடமும் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
News December 7, 2025
திருச்சி: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

திருச்சி மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <


