News November 22, 2024
துறையூரில் நாளை துணை முதல்வர் திறப்பு

துறையூரில் நவம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை அன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறையூர் பகுதியில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளை இன்று அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் துறையூர் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News December 7, 2025
திருச்சி: பண்ணை தொழில் செய்ய சூப்பர் வாய்ப்பு!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்<
News December 7, 2025
திருச்சி மாவட்ட நூலகத்தில் குரூப்-4 மாதிரி தேர்வு

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்0-4, கட்டணமில்லா மாதிரித்தேர்வு வரும் 8-ம் தேதி காலை 10:00 – 1:30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் முழு பாடப்பகுதிகளில் இருந்தும் வினாக்கள் இடம் பெறும். இந்த தேர்வில், மதிப்பெண் குறைந்தவர்களுக்கு அதனை அதிகரிக்க அறிவுரைகள், வழிமுறைகள் வழங்கப்படும் என மாவட்ட நூலக அலவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
திருச்சி: ரூ.18 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் திருச்சி ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது, நடைமேடையில் நின்று கொண்டிருந்த ஹவுராவில் இருந்து வந்த ரயிலில் சோதனை செய்தபோது கேட்பாரற்று கிடந்த 4 பைகளில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள 36 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போதைப்பொருள் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


