News November 22, 2024

மேலும் ஒரு நா.த.க மா.செ விலகல்!

image

நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். சீமானின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிப்பதால் விலகுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விழுப்புரம், சேலம் மாவட்டச் செயலாளர்கள் விலகிய நிலையில் தற்போது கோவை மாவட்டச் செயலாளர் விலகியுள்ளது நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Similar News

News December 7, 2025

வசூல் வேட்டையில் மம்முட்டியின் ‘களம்காவல்’

image

ஜிதின் கே ஜோஷ் இயக்கத்தில் மம்முட்டி, விநாயகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘களம்காவல்’ திரைப்படம் டிச.5-ம் தேதி வெளியானது. மம்முட்டி மீண்டும் வில்லனாக நடித்துள்ள இந்த படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. துல்கர் சல்மான் மற்றும் மம்முட்டி இணைந்து தயாரித்துள்ள இந்த படம், முதல் நாளிலேயே ₹15.7 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

News December 7, 2025

TN-ல் பெரியாரின் சமத்துவ தீபம் தான் எரியும்: CM

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக பிரிவினையை ஏற்படுத்த பாஜகவினர் நினைப்பதாக CM ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மலிவான அரசியலை பாஜக செய்வதாக விமர்சித்த அவர், இந்த கூட்டம் குறித்து மதுரை மக்களுக்கு நன்றாக தெரியும் எனக்கூறினார். மதுரையில் பிரிவினையை ஏற்படுத்த முடியாது என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் எப்போதும் பெரியார் ஏற்றிய சமத்துவ தீபம் தான் எரியும் என குறிப்பிட்டார்.

News December 7, 2025

பள்ளிகள் 9 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அரசுப் பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் நடத்தப்படும் நிலையில், 3-ம் பருவ தேர்வுகள் டிச.16-ல் தொடங்கி டிச.23 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, டிச.24 முதல் ஜன.1 வரை பள்ளிகள் விடுமுறை என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டிச.24 முதல் ஜன.4 வரை அரையாண்டு தேர்வு விடுமுறையாகும்.

error: Content is protected !!