News November 22, 2024
JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்

IIT, NIT உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் UG படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. JEE Mains மற்றும் JEE Advanced என இரு கட்டங்களாக நடத்தப்படும் இதனை தேசிய தேர்வு முகமை(NTA) நடத்துகிறது. 2025 – 2026 கல்வி ஆண்டிற்கான இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். அப்ளை செய்ய விரும்புவோர் இரவு 9 மணி வரை <
Similar News
News August 20, 2025
ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது

கடந்த ஒரு வாரத்திற்கு மேல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹440 குறைந்து ₹73,440-க்கும், கிராமுக்கு ₹55 குறைந்து ₹9,180-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹125-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,25,000-க்கும் விற்பனையாகிறது.
News August 20, 2025
தமிழக மக்களுக்கு அள்ளிக் கொடுத்தவர் மோடி: H ராஜா

துணை ஜனாதிபதி தேர்தலில் INDIA கூட்டணி போட்டியிட்டாலும், உறுப்பினர்களின் எண்ணிக்கைபடி NDA வேட்பாளரே வெற்றி பெறுவார் என H ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கையில் பேசிய அவர், R வெங்கட்ராமனுக்குப் பிறகு தமிழகத்தில் இருந்து யாரும் துணை ஜனாதிபதியாக வராததால் திமுக MP-க்கள் CPR-ஐ ஆதரிக்க வேண்டும் எனக் கூறினார். அதிக முறை தமிழகத்துக்கு வந்த PM மோடி, மக்களுக்கு அள்ளி கொடுத்துள்ளார் என்றார்.
News August 20, 2025
BEAUTY TIPS: முடி உதிர்வை வெங்காயம் தடுக்குமா?

சின்ன வெங்காயத்தை அரைத்துப் பூசினால் வழுக்கைத் தலையில்கூட முடி வளரும் என்று சொல்லப்படுவதை அரோமாதெரபிஸ்ட்டுகள் மறுத்துள்ளனர். கந்தகத்தன்மை (சல்ஃபர்) அதிகமுள்ள சின்ன வெங்காயத்தின் சாற்றை தலைமுடியில் பூசினால், முடி மெலிந்து, உடையும் என்கிறார்கள். மேலும், தலையில் இயற்கையாகச் சுரக்கும் எண்ணெய்ப் பசையை அகற்றி, வறண்டுபோக செய்து, முடி உதிர்வு & வழுக்கை பாதிப்பை மோசமாக்கும் என எச்சரிக்கின்றனர். SHARE IT.