News November 22, 2024
தஞ்சையில் ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News December 13, 2025
தஞ்சாவூர்: மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை

கபிஸ்தலத்தில் அரசுப் பள்ளியின் ஆசிரியரான முருகன் என்பவர் டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். தன்னிடம் டியூஷன் படிக்கும் 16 வயது சிறுமியிடம் ஆபாசமாகப் பேசி, பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், ஆசிரியர் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 13, 2025
தஞ்சை: அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு!

தஞ்சை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <
News December 13, 2025
தஞ்சை: கொப்பரை தேங்காயின் ஆதார விலை உயர்வு

கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.12,027 ஆக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதற்கு தஞ்சாவூர் தென்னை விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஒரு குவிண்டாலுக்கு 445 ரூபாய் வரை விலை உயர்வு கிடைக்கும். இதனால் கொப்பரை தேங்காய் உற்பத்தி அதிகரிக்கும் – விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என தென்னை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


