News September 23, 2024
97 மாணவர்களுக்கு ரூ.6.75 கோடி கடன்

விருதுநகரில் முன்னோடி வங்கி அனைத்து வங்கிகளில் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாமில் 97 மாணவர்களுக்கு ரூ.67 கோடிக்கு கல்வி கடன் பெறுவதற்கான ஆணையை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.இம்முகாமில் மாவட்டத்திலுள்ள 200 தேசிய மயமாக்கப்பட்ட, தனியார் வங்கி கிளைகளின் மாவட்ட அளவிலான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.மாணவர்கள், பெற்றோர்களுக்கு கல்விகடன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
Similar News
News October 20, 2025
விருதுநகர் மக்களே தீபவாளி கொண்டாட… இது முக்கியம்

விருதுநகர் மக்களே, தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு, மின்விளக்குகளால் தீ விபத்து அபாயம் அதிகம். உங்கள் பாதுகாப்பே முதல் முன்னுரிமை. தீயணைப்பு நிலையம் எண்கள்: அருப்புக்கோட்டை:04566-240101, ராஜபாளையம்:04563-220101, சாத்தூர்:04562-264101, சிவகாசி: 04562-220101, ஸ்ரீவி.,: 04563-265101, விருதுநகர்:04562-240101 இங்கு <
News October 20, 2025
விருதுநகர்: மிளகாய் பொடி தூவி நகை பறிக்க முயற்சி

விருதுநகர் டிசிகே பெரியசாமி தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் காசுக்கடை பஜாரில் தங்க நகைகள் செய்யும் பட்டறை வைத்துள்ளார். இவரின் கடைக்கு நேற்று காலை வந்த பட்டு ராஜா அரை பவுனில் தங்க மோதிரம் வேண்டும் என கேட்டார். வேறு கடையில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிய மகாலிங்கத்தின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி நகையைப் பறிக்க முயன்றுள்ளார். இதுகுறித்து பட்டு ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
News October 20, 2025
விருதுநகரில் 61 நாட்கள் நடந்த போராட்டம் வாபஸ்

விருதுநகரில் அரசு போக்குவரத்து தொழிற்சங்கம், சிஐடியு ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் இணைந்து தொடர்ந்து 61 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சருடன் சிஐடியு தொழிற்சங்க தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 61 நாட்கள் நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.