News September 26, 2024

97 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; பெண் கைது

image

க.விலக்கு அருகே பெருமாள் கோவில்பட்டியில் அரசால் தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக தனிப்பிரிவு போலீசார் க.விலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர். பிறகு எஸ்ஐ பிரபா தலைமையிலான போலீசார் ஜெயந்தி வீட்டில் சோதனை செய்ததில் ரூ.69,700 மதிப்புள்ள 97.245 கி.கி. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, ஜெயந்தியை கைது செய்து விசாரித்து வந்தனர்.

Similar News

News November 20, 2024

மாற்றுத்திறனாளி அட்டை வழங்க முகாம் – ஆட்சியர்

image

தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) வழங்குவதற்கான மருத்துவ முகாம் நாளை (நவ.21) சின்னமனூரில் உள்ள அரசு மருத்துவமனையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. தேவையுள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

தேனியில் இலவச போட்டோகிராஃபி பயிற்சி

image

தேனியில் உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் இலவச போட்டோ & வீடியோ கிராஃபி பயிற்சி வருகின்ற டிச.2 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் 30.11.2024 தேதி கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு 04546-251578, 9500314193, 9043651202 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *பகிரவும்*

News November 20, 2024

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் முகாம்

image

தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் முகாம் இரண்டு கட்டமாக 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்தார். பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு தேவையான முகவரி மாற்றம், பிழைத்திருத்தம், புகைப்பட மாற்றம் போன்ற குறைகள் தெரிவிக்கலாம் என்றார்.