News September 10, 2025

‘96 பிரேம்குமார் இயக்கத்தில் பஹத் பாசில்

image

ரசிகர்கள் யாரும் எதிர்பாராத கூட்டணியாக இயக்குநர் பிரேம்குமார், பஹத் பாசில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இது ஆக்‌ஷன் த்ரில்லர் படம் எனவும் தனது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரேம்குமார் கூறியுள்ளார். ஜனவரியில் இருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மேலும், விக்ரமுடனான படத்திற்கு திரைக்கதை எழுத வேண்டியிருப்பதாக பிரேம்குமார் தெரிவித்தார்.

Similar News

News March 3, 2026

சற்றுமுன்: வங்கிக் கணக்கில் மேலும் ரூ.2,000 வந்தது..

image

முதியோர், கைம்பெண்கள், திருநங்கை, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சிறப்பு நிதியாக இன்று ₹2,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதாவது, ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் முதியோர் உதவித்தொகை ₹1,200, சிறப்பு நிதி ₹2,000 என மொத்தம் ₹3,200 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

News March 3, 2026

BREAKING: கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா காங்கிரஸ்?

image

காங்., கேட்கும் கூடுதல் தொகுதிகளை அளிக்க திமுக திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனால், இன்று நடைபெறும் இறுதி பேச்சுவார்த்தைக்குபின் கூட்டணியிலிருந்து காங்., வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்., வெளியேறும்பட்சத்தில் காலியாகவுள்ள 4 ராஜ்யசபா இடங்களில் தேமுதிகவிற்கு ஒன்று, மீதமுள்ள 3 -ல் திமுகவே களமிறங்கவுள்ளது. இதற்கான வேட்பாளர்களையும் இன்று மாலை திமுக அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

News March 3, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹80 குறைந்தது

image

தங்கம் விலை இன்றும் (மார்ச் 3) குறைந்து பொதுமக்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துள்ளது. 1 கிராம் தங்கம் ₹10 குறைந்து ₹15,650 -க்கும், 1 சவரன் ₹80 குறைந்து ₹1,25,200-க்கும் விற்பனையாகிறது. கடந்த 2 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹1,000 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!