News May 3, 2024
95 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் மையம்

நெல்லை சுகாதார ஆய்வாளர் கீதாராணி விடுத்துள்ள செய்தி குறிப்பில், அக்னி நட்சத்திர கத்திரி வெயில் நாளை (மே.4) தொடங்குவதால் பொதுமக்கள் அவ்வப்போது ஓஆர்எஸ் கரைசல் பருக வேண்டும். நெல்லை மாநகராட்சி பகுதியில் 16 இடங்களிலும், ஊராட்சியில் 27 இடங்களிலும் என 43 இடங்களிலும் 42 ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 10 மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் என 95 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Similar News
News August 26, 2025
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் விபரம்

▶️இன்று காலை 10.30 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
▶️மேலப்பாளையம் மண்டலம் 54 வது வார்டு பகுதியில் புதிய சாலை அமைக்கும் இடையே அப்துல் வஹாப் எம்எல்ஏ தொடங்கி வைக்கிறார்.
▶️காலை 8 15 மணிக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா பாளையங்கோட்டை செவன் டாலர் பள்ளியில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறுகிறது.
News August 26, 2025
நெல்லை சீமையின் 100 ஆண்டுகள் பழமையான புகைப்படங்கள்

100 ஆண்டுகளுக்கு முந்தைய நெல்லை சீமை என்பது, தற்போதைய நெல்லை, தென்காசி, நாகர்கோவில் பகுதிகளை உள்ளடக்கியது. இந்த புகைப்படங்கள் 1925 ஆண்டு முதல் எடுக்கப்பட்டவை என கண்டறியப்பட்டவை. இன்று சுற்றுலா தலமாக வலம் வரும் பல இடங்களை அன்று, கூட்ட நெரிசலில் சிக்காமல் தப்பியன. இந்த புகைப்படங்களில் நெல்லை பேருந்து நிலையம், குற்றாலம், நெல்லையப்பர் கோவில் மற்றும் தெரு, திருவள்ளுவர் பாலம் உள்ளன. *ஷேர் பண்ணுங்க
News August 25, 2025
எரிவாயு உருளை நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

நெல்லை மாவட்ட அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வரும் 28ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எரிவாயு பதிவு செய்தல் உள்ளிட்ட குறைகளை நுகர்வோர் நேரில் தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தெரிவித்துள்ளார்.