News March 21, 2025
936 காவலர்களுக்கு பேருந்து பயண அட்டை வழங்கல்

தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள பயண அட்டை வழங்கப்படும் என தமிழக அரசு பிறப்பித்த ஆணையின்படி இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் 936 காவல் ஆளிநர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டது.
Similar News
News March 23, 2025
கள்ளச்சாராய வழக்கில் கைதான மூவருக்கு நீதிமன்ற காவல்

கள்ளசாராய வழக்கில் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., தேவராஜ் மூவரிடமும் தனி, தனியாக விசாரணை மேற்கொண்ட நிலையில், போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்தது. கள்ளக்குறிச்சி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று(மார்.22) ஆஜர்படுத்தப்பட்ட மூவரையும் வரும் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க, நீதிபதி (பொறுப்பு) ரீனா உத்தரவிட்டார்.
News March 23, 2025
கள்ளக்குறிச்சி: வனக்காப்பாளருக்கு துப்பாக்கிச் சூடு

கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை அருகே கல்லமேடு கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன், கிருஷ்ணாபுரம் பிரிவு வனக்காப்பாளரான இவர், நேற்று(மார்.21) முன்தினம் இரவு கீழ்குப்பம் அடுத்த பாக்கம்பாடி ஆட்டுப்பண்ணை காப்புக்காட்டில் ரோந்து சென்றார். அப்போது வன விலங்குகளை வேட்டையாடிய நபர்களை பிடித்த போது வனக்காப்பாளரை துப்பாக்கியால் சுட்டு தப்பிய இருவரில், ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 23, 2025
தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை

ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.