News March 18, 2024
ரயில்வேயில் 9,144 பணியிடங்கள்

நாடு முழுவதும் காலியாக உள்ள 9,144 Technician பணியிடங்களை நிரப்ப இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Technician Gr 1 பணியிடத்திற்கு 36 வயதிற்கு உட்பட்டவர்களும், Gr 3 பணியிடத்திற்கு 32 வயதிற்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். கணிணி தேர்வின் மூலம் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். இதற்கு ஏப்ரல் 4ஆம் தேதிக்குள் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு இங்கே <
Similar News
News January 30, 2026
புது Dress வாங்குன உடனேயே இந்த தவறை பண்ணாதீங்க!

புதிய ஆடைகளை வாங்கியவுடன் அணிந்தால் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நீங்கள் வாங்கிய ஆடையை வேறொருவர் டிரையல் பார்த்திருக்கலாம். அவர்களின் வியர்வை ஆடையில் பட்டிருக்கும். இதை அப்படியே நாம் ஒருநாள் முழுவதும் அணிந்திருந்தால் Rashes, Allergy போன்ற சருமப் பிரச்னைகள் வரலாம். இதனால் புதிய ஆடைகளை துவைத்து, வெயிலில் காயப்போட்ட பிறகு அணிவது நல்லது. விழிப்புணர்வுக்காக SHARE.
News January 30, 2026
வங்கி கடன் அபராதம் தள்ளுபடி.. முக்கிய அறிவிப்பு

வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், RBI முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வழக்கமாக, கடனை முன்கூட்டியே செலுத்துவோரிடம் 3- 4% வரை அபராதத் தொகையை வங்கிகள் வசூலிக்கும். 2026 ஜன.1 முதல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தின்படி, கடன் பெற்றவர்களுக்கே இது பொருந்தும். ஃபிக்சட் வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்கள் இதில் பயன்பெற முடியாது. SHARE IT.
News January 30, 2026
கனிமவள கொள்ளை.. சர்ச்சையில் சிக்கிய திமுக MLA

கரூரில் கல்குவாரி கொள்ளை குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை திமுக MLA பழனியாண்டியின் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படும் விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள அண்ணாமலை, திமுக MLA-வின் கனிமச் சுரண்டலை கேள்வி கேட்டதற்காக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. திமுக அரசு, யாருக்காக ஆட்சி நடத்துகிறது, கடத்தல்காரர்களுக்கும், ரவுடிகளுக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார்.


