News December 27, 2025
90’s கிட்ஸ் நிலைமையை பாத்தீங்களா?

நாளுக்கு நாள் 90’s கிட்ஸ் பெண் தேடும் படலம் மீம்ஸ் போடும் அளவிற்கு பரிதாபமாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் கடலூரை சேர்ந்த இளைஞரோ, ’மணப்பெண் தேவை’ என தனது ஆட்டோவில் கலர்புல் விளம்பரம் செய்து பெண் தேடி வருகிறார். அதில் ஜாதி, மதம் தடையில்லை, வரதட்சணை தேவையில்லை. டிகிரி போதும் என மணப்பெண் தகுதியாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பாவம் 90’s கிட்ஸ் என நெட்டிசன்கள் பரிதாபப்படுகின்றனர்.
Similar News
News January 2, 2026
யார் இந்த ஜே.சி.டி பிரபாகர்?

தவெகவில் இணைந்த <<18744071>>ஜேசிடி பிரபாகர் <<>>எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். 1980, 2011 ஆண்டுகளில் வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று MLA-வாக பணியாற்றி இருந்தார். அதிமுக பிளவின்போது OPS அணியில் முக்கியப் பங்கு வகித்தவர். அதிமுகவை ஒன்றிணைக்கும் நோக்கில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியதில் முக்கியமானவர் இவர். கட்சி ஒருங்கிணைப்பு முயற்சி பலனளிக்காததால் தவெகவில் இணைந்துள்ளார்.
News January 2, 2026
2025-ல் மட்டும் 167 புலிகள் உயிரிழப்பு

உலகிலேயே அதிக புலிகளைக் கொண்ட நாடான இந்தியாவில், 2025-ம் ஆண்டில் 31 குட்டிகள் உட்பட 167 புலிகள் உயிரிழந்துள்ளன. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) தகவலின்படி, இது 2024-ல் பதிவான இறப்புகளை விட 41 அதிகம் ஆகும். எந்த மாநிலத்தில், எவ்வளவு புலிகள் உயிரிழந்துள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News January 2, 2026
MGR புகழை அழிக்க நினைப்போர் அழிவார்கள்: EPS

தஞ்சை தமிழ்ப் பல்கலை., இணையதளத்தில் MGR படம் நீக்கப்பட்டுள்ளதாக கூறி அரசுக்கு EPS கண்டனம் தெரித்துள்ளார். அவரது படத்தை நீக்கிவிட்டால் அவரின் புகழை அழித்துவிடலாம் என நினைப்பது கண்டனத்துக்குரியது என்றும், MGR புகழை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்றும் EPS சாடியுள்ளார். மீண்டும் MGR போட்டோவை பதிவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் உங்கள் கருத்து என்ன?


