News August 26, 2024
ரேஷன் பொருள் தட்டுப்பாடுக்கு 90% தீர்வு: முத்துசாமி

ரேஷன் பொருள் தட்டுப்பாடு பிரச்னைக்கு 90% தீர்வு காணப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டது உண்மைதான் எனக்கூறிய அவர், விரைவில் முழுமையாக தீர்வு காணப்பட்டு மக்களுக்கு தடையின்றி பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். கடந்த 3 மாதங்களாக ரேஷனில் பருப்பு, பாமாயில் கிடைப்பதில் சற்று தட்டுப்பாடு நிலவியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 9, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை இல்லை.. கலெக்டர்கள் அறிவிப்பு

சென்னையைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளை(சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மழை விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை பாடவேளையை பின்பற்றி வகுப்புகளை நடத்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்களே, ரெடியா இருங்க!
News January 9, 2026
மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறார் CM: அன்புமணி

திமுக தேர்தல் வாக்குறுதிகளில் 13% மட்டுமே நிறைவேற்றிவிட்டு, 80% நிறைவேற்றியுள்ளதாக CM ஸ்டாலின் கூறுவது முற்றிலும் பொய் என அன்புமணி விமர்சித்துள்ளார். கல்விக்கடன் ரத்து, சமையல் எரிவாயு மானியம், மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கீடு உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அப்படி இருக்கையில், ஒரு மாநிலத்தின் CM-ஆக இருப்பவர் மீண்டும் மீண்டும் பொய்களை கூறுவது, அவரது பதவிக்கு அழகல்ல என சாடியுள்ளார்.
News January 9, 2026
பொங்கல்.. ஆம்னி பஸ் டிக்கெட் விலை ₹4,000 வரை உயர்வு

பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களின் டிக்கெட் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. சாதாரண நாள்களில் சென்னை – நெல்லை செல்ல ₹1,800 வரை டிக்கெட் விலை இருக்கும் நிலையில், பொங்கல் பண்டிகை நாள்களில் ₹4,000 வரை உயர்ந்துள்ளது. சென்னை மட்டுமின்றி கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் ஆம்னி பஸ்களின் டிக்கெட் கட்டணம் டபுள் மடங்காக உயர்ந்துள்ளது. நீங்க டிக்கெட் போட்டாச்சா?


