News March 4, 2025
’90 HRS WORK’ மனிதர்களுக்கா, ரோபோக்களுக்கா? அகிலேஷ்

தொழிலாளர்கள் வாரம் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது தவறான வாதம் என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். இத்தகைய யோசனை மனிதர்களுக்கா அல்லது ரோபோக்களுக்கா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வேலையின் தரம், அதன் அளவை விட மிக முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், தொழிலாளர்களுக்கும் தனிமனித சுதந்திரம், குடும்பம், பொழுதுபோக்கு இருப்பதை நிராகரிக்க முடியாது என்றார்.
Similar News
News March 4, 2025
மேட்சுக்கு முன்பே ரோஹித்தின் மோசமான ரெக்கார்ட்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் இன்றும் டாஸில் தோற்று மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். ODIல் தொடர்ந்து 11 டாஸ்களை அவர் இழந்துள்ளார். இதன் மூலம், தொடர்ந்து ODI டாஸில் தோற்ற கேப்டன்கள் பட்டியலில் 2வது இடத்தில் ரோஹித் இருக்கிறார். முதல் இடத்தில் மேற்கு இந்திய தீவுகளின் பிரையன் லாரா(12) இருக்கிறார். அதே நேரத்தில் இந்திய அணி, தொடர்ந்து 14 ODIல் டாஸை தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 4, 2025
இதயம் முரளி படத்தின் லுக்… அசத்தும் இளம் நடிகை…

டிராகன் படத்தில் இளைஞர்களை பெரிதும் கவர்ந்த நடிகைதான் கயாடு லோஹர். அடுத்ததாக, இதயம் முரளி என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். அந்த படத்திற்காக எடுக்கப்பட்ட லுக் டெஸ்ட் புகைப்படங்களை, எக்ஸ் தளத்தில் கயாடு லோஹர், தனது ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார். விரைவில் இதயம் முரளி படத்தில் உங்களை சந்திக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார். எத்தனை பேருக்கு கயாடு லோஹரை பிடிக்கும் என பதிவிடுங்கள்.
News March 4, 2025
அதிமுக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம்

பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு 6 மாதங்கள் கழித்து முடிவெடுப்போம் என இபிஎஸ் கூறியுள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக பாஜகவுடன் கூட்டணியே இல்லை என அழுத்தமாக பேசி வந்த அவர், தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றியுள்ளார். சேலத்தில் பேசிய அவர் DMK மட்டுமே தங்கள் எதிரி எனவும் தேர்தல் நெருங்கும் போதுதான் யார் யார் உடன் இருப்பார்கள் எனத் தெரியும் என்றார்.