News August 25, 2024

ரூ.91க்கு 90 நாள் வேலிடிட்டி.. BSNL அசத்தல்

image

மலிவு திட்டங்களை கொடுக்கும் ஜியோவாலேயே அளிக்க முடியாத அதிக வேலிடிட்டி திட்டத்தை BSNL வழங்குகிறது. இதன்படி, ரூ.91 ரீசார்ஜ் செய்தால் 90 நாள் வேலிடிட்டி கிடைக்கும். சிம்மை ஆக்டிவாக வைக்க இத்திட்டம் உதவும். இதில் டேட்டாவோ, டாக் டைமோ கிடையாது. அதற்கு தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதன்படி, 1 நிமிட அழைப்புக்கு 15 காசு, 1 எம்பி டேட்டாவுக்கு 1 காசு, 1 எஸ்எம்எஸ்-க்கு 25 காசு வசூலிக்கப்படும்.

Similar News

News March 5, 2026

BREAKING: விபத்தில் சிக்கிய இந்திய விமானம்?

image

அசாமில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படையின் போர் விமானம் Sukhoi Su-30MKI விபத்தில் சிக்கியதாக சந்தேகம் எழுந்துள்ளது. கவுகாத்தியில் இருந்து புறப்பட்ட விமானம், மாலை 7 மணியளவில் கர்பி அங்லாங்கில் உள்ள சோகிஹோலா அருகே ரேடாரில் இருந்து மறைந்து மாயமானது. அது விபத்தில் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், தேடும் பணியை விமானப்படை தீவிரப்படுத்தியுள்ளது.

News March 5, 2026

தமிழக கவர்னர் மாற்றமா?.. பரபரப்பு தகவல்

image

தமிழ்நாடு கவர்னர் R.N.ரவியை மே.வங்க கவர்னராக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக <<19307017>>மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்<<>>. R.N.ரவியை மாற்ற வேண்டுமென்று திமுக நீண்டகாலமாக கோரி வந்த நிலையில், 5 ஆண்டுகால ஆட்சி முடிவில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மே.வங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்பாரா அல்லது நிரந்தரமாக மாற்றமா என்பதும் தெரியவில்லை.

News March 5, 2026

ஈரானுக்காக ரஷ்யா- சீனா வரவில்லை.. இதான் காரணமா?

image

இஸ்ரேலும், USA உடனான போரில் ஈரானின் கூட்டாளிகளான ரஷ்யாவும், சீனாவும் கண்டனம் தெரிவித்ததோடு சரி, ராணுவ ரீதியாக உதவ முன்வரவில்லை. ஏற்கெனவே உக்ரைனுடன் போர்புரிந்து வருகிறது ரஷ்யா. அதனால் மற்றொரு போர் வேண்டாம் என அந்நாடு ஒதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் சீனா USA-வை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை, மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கையில் தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!