News March 18, 2024
சாலை விபத்தில் 9 பேர் பலி

பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் குழந்தை உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக 6 பேர் ஜீப்பில் சென்றபோது, அதிக பாரத்துடன் வந்த டிராக்டர் ஜீப்பின் மீது மோதியது. இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 5, 2025
இராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் அசத்தல்!

இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மாணவன் பி.கோபிபிரசாந்த், புது டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம், அந்தமானில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார். மேலும், அதே கல்லூரியை சேர்ந்த மாணவன் எஸ்.ஹரி, தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் 2 மற்றும் 3ஆம் இடங்களை பிடித்து கோப்பைகளை வென்றுள்ளார்.
News September 5, 2025
வெள்ளிக்கிழமையில் துர்க்கையின் அருளை பெற

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்
பொருள்:
காத்யாயனியின்(மகாதேவி) மகள் தெய்வத்தை நான் தியானிக்கிறேன்!
ஓ, துர்கா தேவி எனக்கு உயர்ந்த புத்தியைக் கொடுத்தார்!
என் மனதை ஒளிரச் செய்வாயாக! SHARE IT.
News September 5, 2025
FB, Insta உள்பட 26 செயலிகளுக்கு தடை

ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், X உள்பட 26 சோஷியல் மீடியா செயலிகளுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. சோஷியல் மீடியாக்கள், சமூக பொறுப்புணர்வுடன் செயல்படுவதை நோக்கமாக கொண்டு சமீபத்தில் அந்நாட்டு அரசு புதிய சட்டத்தை இயற்றியது. இதன்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அரசிடம் முறையாக பதிவு செய்யாத செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், டிக்டாக் செயலி பதிவு செய்யப்பட்டுள்ளதால், அதற்கு தடை இல்லை.