News March 30, 2024

ஏப்ரல் மாதம் வங்கிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை

image

ஏப்ரல் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் வங்கிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை வருகிறது. ஏப்.1 இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக மக்களுக்கு சேவை கிடையாது. ஏப்.9 தெலுங்கு புத்தாண்டு, ஏப்.10 (அ) ஏப்.11 ரம்ஜான், ஏப்.19 தமிழகத்தில் தேர்தல். இத்துடன் (ஏப்.7, 14, 21, 28) ஞாயிற்றுக்கிழமைகள், 2வது (ஏப்.13), 4வது (ஏப்.27) சனிக்கிழமைகளில் விடுமுறையாகும். இதற்கேற்ப உங்கள் நிதி தேவையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

Similar News

News February 14, 2026

காங்., ஆட்சியில் தினம்தினம் தாக்குதல்: அமித்ஷா

image

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடக்கும் என அமித்ஷா கூறியுள்ளார். இது குறித்து அவர்கள் வாய் திறக்கமாட்டார்கள் என்ற அவர், மோடி வந்த பிறகு முதன்முறையாக புல்வாமா தாக்குதலுக்கு வான்வழியாக பதிலடி தரப்பட்டது என்றார். மேலும், புதுச்சேரியில் நாராயணசாமியின் அரசு ஊழல் நிரம்பியதாக இருந்ததாகவும் அவர் விமர்சித்தார்.

News February 14, 2026

3 நாளில் 10,000 ஆணுறைகள் காலி…

image

இத்தாலியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கிய 3 நாள்களில் 10,000 ஆணுறைகள் காலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1988-ல் சியோல் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு, எய்ட்ஸ் நோய் பரவியதை அடுத்து ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு இலவச ஆணுறைகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் குறைவாக வழங்கியதே காலியானதற்கு காரணம் என்றும், தற்போது கூடுதலாக வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 14, 2026

டெல்லிக்கு அடிமையாய் இருந்த காலம் போய்விட்டது: அமித்ஷா

image

இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி டெல்லிக்கு அடிமையாக இருந்தது என அமித்ஷா விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் தற்போது இருக்கும் NDA கூட்டணி அரசு சுதந்திரமாக இயங்கி வருவதாக கூறிய அவர், டெல்லிக்கு அடிமையாய் இருந்த காலம் போய்விட்டது என கூறியுள்ளார். மேலும், புதுச்சேரியில் ரங்கசாமி சிறப்பான ஆட்சியை நடத்துகிறார் எனவும் வரும் தேர்தலில் 24 இடங்களை வெல்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!