News September 20, 2025

பள்ளிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை

image

அடுத்த வாரத்தில் இருந்து பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறையாகும். செப்.10-ம் தேதி முதல் நடைபெற்று வரும் காலாண்டு தேர்வு வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து, செப்.27 முதல் அக்.5 வரை 9 நாள்கள் தொடர் விடுமுறையாகும். இதனையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணத்தை சரியாக திட்டமிடுங்கள் நண்பர்களே! SHARE IT.

Similar News

News September 20, 2025

TRB ராஜாவை மறைமுகமாக சாடிய விஜய்

image

திருவாரூர் பரப்புரையில் அமைச்சர் TRB ராஜாவை விஜய் மறைமுகமாக சாடினார். இந்த மாவட்டத்தில் ஒரு மந்திரி இருக்கிறார். அவரோட வேலை என்ன தெரியுமா? CM குடும்பத்திற்கு சேவை செய்யுறது மட்டும் தான் அவருடைய வேலை. அந்த அமைச்சருக்கு மக்கள் தான் முக்கியம்னு புரிய வைக்க வேண்டும் என விஜய் கூறினார். மேலும், திருவாரூரில் பஸ் ஸ்டாண்டை NH உடன் இணைக்க சரியான ரோடு வசதி கிடையாது என்று குற்றஞ்சாட்டினார்.

News September 20, 2025

ரொமான்ஸ் செய்வதில் சிறந்த ராசிக்காரர்கள்

image

ரொமான்ஸ் வாழ்வின் முக்கியமான அங்கம். ஆனால் ஒவ்வொருவரின் ராசிக்கேற்ப அவர்கள் ரொமான்ஸ் செய்யும் விதம் மாறுபடுகிறது. குறிப்பாக மேஷ ராசியினர் துணையுடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புகிறார்கள். கடகம் புதுப்புது முயற்சிகள் செய்கிறார்கள், சிம்மம் விசுவாசமாக இருக்கிறார்கள். துலாமும், மீனமும் உணர்ச்சி மிக்கவர்கள். மற்ற ராசிக்காரர்கள் ரொமான்சில் அதிக கூச்சம் கொண்டவர்கள். நீங்கள் என்ன ராசி?

News September 20, 2025

தீபாவளி பரிசாக ₹2000.. தேதி குறிச்சாச்சு

image

PM கிசான் திட்டத்தின் 21-வது தவணை வரும் அக்டோபர் 18-ம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தேசிய ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ₹2,000 என ஆண்டுக்கு ₹6,000 வழங்கப்படுகிறது. அக்.20-ல் தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், விவசாயிகளுக்கு முன்கூட்டியே தவணைத் தொகையை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

error: Content is protected !!