News May 12, 2024

9 வயது குழந்தை தூக்கிட்டு தற்கொலை

image

நந்திவரம் – கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் காலனி 4 ஆவது குறுக்கு தெருவில் வசிப்பவர் பிரபு. 3 ஆம் வகுப்பு படிக்கும் இவருடைய 9 வயது பெண் குழந்தை நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 26, 2025

செங்கல்பட்டு வரும் விஜய்

image

தவெக தலைவர் விஜய் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் அக்.25ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக பிப்ரவரி-21-2026 ம் தேதி சுற்றுப்பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் முதலில் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் செய்து வந்த நிலையில், இப்போது ஞாயிற்று கிழமைகளிலும் மக்களை சந்திக்க உள்ளதால் நாளொன்றுக்கு 2 மாவட்டம் வீதம் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. (SHARE)

News September 26, 2025

செங்கல்பட்டு காவல்துறை அறிவுறுத்தல்

image

செங்கல்பட்டு மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வாகனங்கள் சாலையில் செல்லும் போது வெளிச்சம் குறைந்து காணப்படுகிறது. இதனால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே மழை பொழியும் நேரங்களில் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு செல்லும்படி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

News September 26, 2025

செங்கல்பட்டு: திருமணம் செய்ய போகும் பெண்களின் கவனத்திற்கு

image

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு & ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தங்கம் பெற சூப்பர் வாய்ப்பு. தெரிந்தவர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.

error: Content is protected !!