News March 4, 2026

9 லட்சம் கோடி ரூபாய் சரிந்தது.. அச்சச்சோ

image

மத்திய கிழக்கிலுள்ள போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் <<19293844>>பங்குச்சந்தை<<>> கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்று ஒருநாள் மட்டும் முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட ₹9.5 லட்சம் கோடியை இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. டாடா ஸ்டீல், Ultratech, இண்டிகோ போன்ற நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதே நேரத்தில், பாதுகாப்பு துறை பங்குகள் மட்டும் 5% – 13% வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 30, 2026

₹30,000 சம்பளம்.. +2 தகுதி போதும்

image

இந்திய ராணுவத்தில் காலியாகவுள்ள செவிலியர் உதவியாளர் (Tech) & கால்நடை மருத்துவத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. *வயது வரம்பு : 17 ½ – 23 *தகுதி: +2-ல் 50% தேர்ச்சி *உடற்தகுதி தேர்வு, மருத்துவத் தகுதி, ஆன்லைன் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர் *சம்பளம்: ₹30,000 – ₹40,000 *இதற்கு ஏப்.1-க்குள் இந்த <>லிங்க்கில்<<>> விண்ணப்பிக்கவும்.

News March 30, 2026

சத்துகள் நிறைந்த சக்கரவர்த்தி கீரை

image

உடலில் இரத்தசோகை பிரச்னையை தீர்க்க விரும்பினால் வாரம் 2 முறை சக்கரவர்த்தி கீரையை சாப்பிடவும். இக்கீரையில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபோலேட் என அனைத்தும் நிறைந்திருக்கின்றன. இது எலும்புகள் & பற்களின் வலிமை, ஜீரண மண்டலம், கண் பார்வைக்கு மிகவும் நல்லது. வைட்டமின் சி & ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த சக்கரவர்த்தி கீரையை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

News March 30, 2026

ஈரானின் தாக்குதலில் US ரேடார் விமானம் காலி

image

சவுதியின் சுல்தான் விமானப்படை தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் US ரேடார் விமானம் இரண்டாகப் பிளந்து நொறுங்கியது. தாக்குதலுக்குள்ளான அமெரிக்காவின் மிக முக்கியமான E-3G வான் கண்காணிப்பு ரேடார் விமானத்தின் மதிப்பு சுமார் ₹4,750 கோடி என்று கூறப்படுகிறது. மேலும், இந்த தாக்குதலில் வானில் எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்களும் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!