News October 31, 2025
9 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவது, சிறுகுற்றங்களுக்கு தண்டனைக்கு பதிலாக அபாரம் விதிப்பது உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இருமுறை நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட தமிழக நிதி நிர்வாக பொறுப்புடைமை சட்டத்திற்கும் கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார்.
Similar News
News November 1, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 1, ஐப்பசி 15 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: ஏகாதசி ▶சூலம்: கிழக்கு▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை
News November 1, 2025
வெனிசுலா மீது USA ராணுவ தாக்குதலா?

USA-ல் போதைப்பொருள்கள் ஊடுருவுவதற்கு வெனிசுலாவை டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். இந்நிலையில் ஓரிரு நாள்களில் வெனிசுலா மீது ராணுவ தாக்குதல்களை நடத்தும்பொருட்டு, அந்நாட்டு கடல் பகுதிக்கு அருகே USA, தனது படைகளை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை ‘No’ என்று ஒரே சொல்லில் டிரம்ப் மறுத்துள்ளார். கடந்த செப்டம்பரில் கரீபியன் கடலில், போதைப்பொருள் கப்பல் மீது USA தாக்குதல் நடத்தியது.
News November 1, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க


